செருப்பில் தொடங்கி விளக்குமாறில்

*ஒரு புலவர் காளமேக புலவரிடம் கேட்டார்.*

*“ஐயா, நீர் பெரிய புலவர் என்று பேசிக் கொள்கிறார்களே. உம்மால் முருகனைப் புகழ்ந்து பாட முடியுமா?” என்றார்.*

*“முருகன் அருளால் முடியும். வேலில் தொடங்கவா? மயிலில் தொடங்கவா?” என்றார் காளமேக புலவர்.*

*”வேலிலும் தொடங்க வேண்டாம். மயிலிலும் தொடங்க வேண்டாம். செருப்பில் தொடங்கி விளக்குமாறில் முடித்தால் போதும்” என்று குசும்பாகக் கூறிவிட்டார் போட்டிப் புலவர்.*

*என்ன கொடுமை?*

*என் இறைவனை,* *முத்தமிழ்முதல்வனை,*
*செந்தமிழ் தெய்வத்தை, வெற்றி வேல் அழகனை,* *கருணைக் கடவுளை,*
*கண்கவர் காளையை, முருகனை*
*பாடும் போது செருப்பு என்று தொடங்கி விளக்குமாறு என்று முடிப்பதா?*
*தகுமா? முறையா? என மனம் கேட்க...*

*அதை தகும் என்றும்,  முறை என்றும் மிகமிக அழகாக நிரூபித்தார் காளமேக புலவர்.*

*இப்படி .....*

*#செருப்புக்கு_வீரர்களை*
*#சென்றுழக்கும்_வேலன்*
*#பொருப்புக்கு_நாயகனை*
*#புல்ல_மருப்புக்கு*
*#தண்தேன் பொழிந்த*
*#திரு_தாமரைமேல்*
*#வீற்றிருக்கும்*
*#வண்டே_விளக்குமாறே*

*செரு என்றால் போர்க்களம். செருப்புக்கு என்றால் போர்க்களம் புகும் என்று பொருள்படும்.*
*அப்படி போர்க்களத்தின் புகுந்த வீரர்களை வெற்றி கொள்ளும் முருகனை அணைத்துக் கொள்ளத் துடிக்கிறது உள்ளம்.*
*குளிர்ந்த தேன் நிறைந்த தாமரை மலர் மேல் வீற்றிருக்கும் வண்டே,*
*அந்த முருகன் இருக்கும் இடத்தை விளக்குமாறே உன்னைக் கேட்கிறேன்.*
*விளக்குமாறு என்பதற்கு விளக்கம் ,  சொல்லுமாறு என்றும் பொருள் கொள்ளலாம் அல்லவா.....?*

*இப்படி செருப்பில் தொடங்கி விளக்குமாறில் முடிகின்றது இந்த முருகன் பாட்டு.....!*

Comments